Sunday, January 23, 2022

முத்திக்கு வித்தாகும் புத்தி

சித்தியும் சித்திதரும் தெய்வம் 
ஆகித் திகழும் பரா 
சத்தியும் சத்தி தழைக்கும் 
சிவமும் தவம் முயல்வார் 
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்து 
ஆகி முளைத்தெழுந்த 
புத்தியும் புத்தியினுள்ளே 
புரக்கும் புரத்தையன்றே. 

(ஸ்ரீஅபிராமி பட்டர், அபிராமி அந்தாதி) 

ஒன்று வேண்டும் என்று இலட்சியம் இருந்தால் அது சித்தியாவதற்கு, கைக்கு எட்டுவதற்கு என்ன வேண்டும்? தெய்வக் கருணை வேண்டும். அத்தகைய கருணையே வடிவெடுத்தவள் அன்னை பராசத்தி. சத்தி இருக்கும் இடத்தில் சிவமும் இருக்கும். ‘இயங்கும் பிரம்மம் காளி; நிற்கும் காளி பிரம்மம்’ என்பது ஸ்ரீராமகிருஷ்ணர் வாக்கு. அந்தப் பிரம்மத்தை அடைவதுதானே முக்தி. அந்த முக்திக்கு வித்தாக இருப்பதோ நல்ல புத்தி. அந்தப் புத்தியினுள் அமர்ந்து எதுவும் கோணல் ஆகாதபடிக் காத்து நிற்பவள் அவள்தான் திரிபுரசுந்தரியாகிய அபிராமி. அதனால் அவளைத் தியானம் செய்தால் மற்றதெல்லாம் நேர் ஆகும் அன்றோ! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment